வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 22 ஜூலை 2014 (18:44 IST)

பாபா அணு ஆய்வு மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்

பிரதமர் நரேந்திர மோடி, 2014 ஜூலை 21 அன்று மும்பை மாநிலத்தின், ட்ராம்பே பகுதியில் உள்ள பாபா அணு ஆய்வு மையத்தை பார்வையிட்டார். 
 
முன்னதாக, பாபா அணு எரிசக்தித் துறையின் செயலர் மற்றும் தலைவரான ஆர்.கே. சின்ஹா, பிரதமரை வரவேற்றார். பின்னர், பிரதமர் மோடி துருவா அணு உலையும் ஆய்வு மையத்தில் உள்ள வசதிகளையும் பார்வையிட்டார். சமுதாயத்தில் அணுசக்தியின் பயன்பாட்டைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். உணவு, விவசாயம், சுகாதாரம், நீர்வளம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அணுக் கதிர் அலை தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் குறித்த விளக்கங்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன.
 
இந்திய அணுசக்தி திட்டத்தின் பல்வேறு முகங்கள் குறித்துத் தலைவர் ஆர்.கே.சின்ஹா விளக்கினார். பாபா அணுமின் நிலைய இயக்குநர் சேகர் பாசு, அணுமின் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் எஸ்.எஸ். பஜாஜ், உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.