வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 6 ஜூன் 2021 (08:59 IST)

பெட்ரோலில் 20% எத்தனால்... 2025-க்குள் இலக்கை எட்ட மோடி முடிவு!

பிரதமர் 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு சாத்தியம் என தெரிவித்துள்ளார். 

 
பெட்ரோலில் எத்தனால் கலந்தால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையுமென்றும், அதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையுமென்றும் மத்திய அரசு கூறி வருகிறது.எனவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 ஆம் முதன் முதலில் ஆட்சி அமைத்தது முதல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டில் 1 முதல் 1.5 சதவீதம் எத்தனால் கலப்பை செயல்படுத்தி வந்த இந்தியா தற்போது 8.5 சதவீதம் எத்தனால் கலந்து வருகிறது. இந்த இலக்கை அடுத்த ஆண்டுக்குள் 10 சதவீதமாகவும், 2030-ம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த இலக்கை 2020 - 2025 ஆம் ஆண்டுக்குளேயே எட்ட முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.