வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 2 மார்ச் 2015 (19:15 IST)

நாடாளுமன்ற உணவகத்தில் சாப்பிட்ட பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) எம்.பி.க்கள் சிலருடன் சேர்ந்து நாடாளுமன்ற உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டார்.
 
நாடாளுமன்றத்தின் முதல் தளத்தில் 70ஆம் எண் அறையில் உணவகம் உள்ளது. எம்.பி.க்களுக்கு இங்கு மிகக் குறைந்த விலையில் உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. இங்கு 'சர்ப்ரைஸ் விசிட்' செய்த மோடி, சைவ உணவுக்கு ஆர்டர் செய்தார்.
 
உணவு பரிமாறப்பட்டதும், குஜராத் மாநில எம்.பி.க்கள் இருவர், பிரதமருடன் அமர்ந்து சாப்பிட்டனர். பிறகு உணவுக்கான தொகையாக ரூ.29 செலுத்திய பிரதமர், அங்கிருந்த வருகையாளர் பதிவேட்டில் நன்றி தெரிவித்து கையெழுத்திட்டார்.
 
நாட்டின் மிகக் குறைந்த விலை உணவகங்களில் நாடாளுமன்ற உணவகமும் ஒன்று. ரூ.12 இருந்தாலே இங்கு திருப்தியாக சாப்பிட முடியும். இங்கு 1 பிளேட் சிக்கன் பிரியாணியின் விலை ரூ.34 ஆகும்.