1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (14:27 IST)

ராகுல்காந்தியை அடுத்து குமரிக்கு வருகிறார் பிரதமர் மோடி

சமீபத்தில் ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டமே நிலைகுலைந்து போய், அம்மாவட்டம் முழுவதுமே பெருமளவு பாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்த புயலின் காரணமாக திசைமாறி போன நூற்றுக்கணக்கான மீனவர்களின் கதி இன்னும் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை
 
இந்த நிலையில் குஜராத் தேர்தல் காரணமாக தேசிய கட்சிகளின் தலைவர்கள் குமரிக்கு வந்து சேதத்தை பார்வையிடாமல் இருந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி குமரிக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்
 
இந்த நிலையில் ராகுல்காந்தியை அடுத்து பிரதமர் மோடியும் குமரிக்கு வர திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு வரவுள்ளதாகவும், அப்போது அவர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பின்னர் நிவாரண உதவி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.