வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (04:14 IST)

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று இந்தியாவின் மிக நீண்ட பாலத்தை திறந்து வைக்கின்றார்

அருணாச்சல பிரதேசத் மாநிலத்தின் தலைநகர் இட்டாநகரில் உள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகளில் குறுக்கே 9.2 கி.மீ தொலைவில் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்த பாலம் தான் இந்தியாவிலேயே மிக நீண்ட பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.



 


இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால்  அசாம், அருணாச்சலபிரதேசம் ஆகிய இரு மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து நேரம் 4 மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த  இரு மாநிலங்களின் வர்த்தக போக்குவரத்திற்கு இந்த பாலம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அதுமட்டுமின்றி அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அவ்வப்போது சீனா தொந்தரவு செய்து வருவதால் சீனாவின் நடவடிக்கையை எதிர்க்க இந்த பாலம் வழியாகராணுவ டாங்குகளையும் தாங்கும் சக்தியுடன் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பாலம் பாதுகாப்பு ரீதியாகவும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.