1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (15:17 IST)

பிரதமர் மோடி சொன்ன ஏழு விதிமுறைகள்! ஊரடங்கில் கடைபிடிக்கலாமா ?

இன்று காலை வீடியோ மூலம் பேசிய பிரதமர் மோடி பேசிய போது அறிவித்த 7 விதிமுறைகள் என்ன தெரியுமா?

இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு இன்றோடு முடிய இருக்கிறது. இந்நிலையில் சற்று முன்னர் வீடியோ மூலம் பேசிய மோடி மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அவரது பேச்சில் ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய 7 விதிமுறைகளைக் குறிப்பிட்டார்.

1. முதியவர்களை பார்த்துக் கொள்ளுங்கள். உடல்நலக்குறைவு இருப்பவர்களிடம் அதிக கவனம் தேவை.
2. ஊரடங்கு மற்றும் சமூக விலகல் விதிகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள்., வீடுகளில் கூட மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள்.
3. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஆயுஷ் அமைச்சகம் வெளியிடும் அறிவுரைகளை பின்பற்றுங்கள். ஆரோக்யமான உணவுகளை உண்ணுங்கள்.
4. அனைவரும் மத்திய அரசின்ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
5. முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்களின் உணவு தேவையை நம்மால் பூர்த்தி செய்ய முடியுமா என யோசியுங்கள்.
6. தொழிற்சாலைகள், ஊழியர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது.
7. நமது மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோரை நாம் மதிப்பதுடன், அவர்களது பணிக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.