செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 8 ஏப்ரல் 2021 (07:31 IST)

கோவிட் தடுப்பூசி 2வது டோஸை எடுத்து கொண்டார் பிரதமர் மோடி!

கோவிட் தடுப்பூசி 2வது டோஸை எடுத்து கொண்டார் பிரதமர் மோடி!
கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
மார்ச் 1ஆம் தேதி முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் டோஸை எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி தற்போது இரண்டாம் டோஸையும் எடுத்துக்கொண்டார். டெல்லியில் இன்று இரண்டாம் டோஸை அவர் போட்டுக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது
 
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பிரதமருக்கு கொரோனா வைரஸ் 2ஆம் டோஸை செலுத்தினர். பிரதமரை அடுத்து மேலும் சில மத்திய அமைச்சர்களும் பிரமுகர்களும் இரண்டாம் டோஸாஇ செலுத்தி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
கொரோனா வைரஸ் தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே பிரதமர் தானாக முன்வந்து இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது