1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (08:32 IST)

உலக மருத்துவர் தினம் - பிரதமர் மோடி இன்று உரை!

ஜூலை 1 ஆன இன்று உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு டாக்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். 

 
மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற டாக்டருமான பிதன் சந்திர ராயின் நினைவாக ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பிற்பகல் 3 மணிக்கு இந்திய மருத்துவ கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் மோடி உரையாற்றுகிறார். 
 
இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து டாக்டர்களின் பணியில் இந்தியா பெருமைப்படுகிறது. தற்போது கொரோனா பேரிடர் காலங்களில் அயராது உழைக்கு மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.