செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:24 IST)

ஒரே பூமி.. ஒரே குடும்பம்.. ஒரே எதிர்காலம்.. பிரதமர் மோடி பேச்சு..!

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே தேர்வு, ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே மதம் என்று பாஜகவின் கொள்கையாக இருந்த நிலையில் தற்போது ஒரே பூமி ஒரே குடும்பம் என்று பிரதமர் மோடி பேசி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர் உச்சி மாநாடு நடந்த நிலையில் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். அதில் அமைதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவை ஒன்றாக இணைந்து அனைவரும் முன்னேற வேண்டிய நேரம் இது என்று தெரிவித்தார்.
 
 அனைத்து நாடுகளும் மோதல் போக்கை விடுத்து ஒரே உலகம்  ஒரே பூமி ஒரே குடும்பம் என்ற கொள்கையுடன் வாழ வேண்டும் என்றும் மோதல்கள் நடந்தால் யாருக்கும் பயன் இருக்காது என்றும் தெரிவித்தார். 
 
பிளவு பட்ட உலகம் சவாலுக்கு தீர்வை கொடுக்காது என்றும் ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் நாம் அனைவரும் உலகை பார்க்க வேண்டும் என்றும் பிரதமர்  மோடி தெரிவித்தார்.
 
Edited by Siva