வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (19:55 IST)

குஜராத் அரசின் ஸ்வலம்பான் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பதினொறு புதிய அம்சங்களைக் கொண்ட குஜராத் அரசின், ஏழைகளுக்கான ஸ்வலம்பான் (Swavalamban Yojana) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்தீரில் துவக்கி வைத்தார். 
 
இந்நிகழ்ச்சியில் பிரதமர் தெரிவித்ததாவது:- 
 
செப்டம்பர் 17 நாடு முழுவதும் விஷ்வகர்மா தினமாக அனுசரிக்கப் படுகிறது. கடின உழைப்பால் வாழும் அனைத்து மக்களும் (ஷ்ரம் யோகிகள்) விஷ்வகர்மாவை மரியாதையுடன் வணங்குகிறார்கள். ஸ்வலம்பான் திட்டத்தை விஷ்வகர்மா தினத்தன்று துவக்க முடிவு செய்த மாநில அரசுக்கு எனது வாழ்த்துகள்.
 
தன்னிறைவு, சுயமரியாதை ஆகியவை கர்ம யோகிக்கு முக்கியம் ஆகும். எந்தக் கர்ம யோகிக்கும் பிறரைச் சார்ந்து இருக்க பிடிக்காது. வறுமையை எதிர்த்துப் போராடக் கர்ம யோகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காகக் குஜராத் மாநில அரசு இந்த ஏழைகளுக்கான திட்டத்தைத் தொடங்கி உள்ளது. ஷ்ரம்மேவ ஜெயத்தே என்ற கொள்கையை மனத்தில் வைத்து இது கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
கால்நடை பராமரிப்பு, பால் உற்பத்தியில் குஜராத் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு அதிகாரமும் பயனும் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில் தொழில் பயிற்சி மையம், திறன் மேம்பாட்டுக்குப் பயிற்சி அளிக்கிறது. நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களும் இத்திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுவர்.
 
இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
 
குஜராத் மாநில ஆளுநர் ஓ.பி. கோலி, குஜராத் மாநில முதலமைச்சர் திருமதி ஆனந்த்தீபன் பட்டேல்(Anandiben Patel), மாநில அமைச்சர்கள் உள்பட பலர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.