திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (10:24 IST)

லட்சத்தீவின் அழகை ரசித்த பிரதமர் மோடி.! கடலில் நீந்திய படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி..!!!

modi lakshaw
இயற்கை அழகுடன் லட்சத்தீவின் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று லட்சத்தீவு பயணம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
 
 
இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் தங்கியிருந்தபோது ஸ்நோர்கெல்லிங் எனப்படும் நீருக்கு அடியில் நீந்தும் பயிற்சியை முயற்சி செய்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
தனது பயண அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதோடு, அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆழ்கடல் நீச்சலின்போது, பிரதமர் கண்ட பவளப்பாறைகள், மீன்கள் ஆகியவற்றின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.  காலை நடைப் பயணத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

 
மேலும் பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இயற்கை அழகுடன், லட்சத்தீவின் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.   140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க தனக்கு வாய்ப்பளித்ததாக தெரிவித்துள்ளார். லட்சத்தீவு  மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.