திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (10:18 IST)

ஒரே நாளில் ஒரே இடத்தில் ராகுல்காந்தி – நரேந்திரமோடி? – குஜராத்தில் பரபரப்பு!

PM Modi sad
குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் ஒரே பகுதிக்கு ஒரே நாளில் செல்ல இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் குஜராத்தில் கால் பதிக்க திட்டமிட்டு வருகிறது.

குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி குஜராத் செல்கிறார். இதற்காக நாளை டிசம்பர் 19ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி. டிசம்பர் 20ம் தேதி சோம்நாத் கோவில் செல்லும் பிரதமர் மோடி, பின்னர் சவுராஷ்டிராவில் பிரச்சாரம் செய்கிறார்.


அதன் பின்னர் பாரூச் மற்றும் நவ்சாரி ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதே 20ம் தேதியன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும் நவ்சாரி வந்தடைய உள்ளது. இரு பெரும் தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இருவர் ஒரே நாள் ஒரே இடத்திற்கு சென்றடையும் நிலையில் அவர்களுக்கிடையே சந்திப்பு நிகழுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Edited By Prasanth.K