ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 மே 2021 (11:15 IST)

ஷைலஜாவுக்கு ஏன் பதவி இல்லை? பினராயி விஜயன் விளக்கம்!

ஷைலஜாவுக்கு அமைச்சரவையில் பதவி வழங்காதது குறித்து பினராயி விஜயன் கருந்து தெரிவித்துள்ளார். 

 
கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் சைலஜாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் முதல்வர் பினராய் விஜயன் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். 
 
அமைச்சர் பதவிக்கு பதிலாக அவருக்கு சட்டமன்ற கொரடா பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருக்கு அமைச்சரவையில் பதவி வழங்காதது குறித்து பினராயி விஜயன் கருந்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஷைலஜாவுக்கு மீண்டும் அமைச்ச்ர பதவி வழங்க கூடாது என்பது கட்சியின் தீர்மானம். இரண்டு முறையாக யாருக்கும் பதவி வழங்க கூடாது என்பது கட்சியின் கொள்கை முடிவு. அதில் இருந்து ஷைலஜாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.