திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 மே 2022 (15:21 IST)

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்காக நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மாற்று தேதி குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 
2022 ஆம் ஆண்டில் MD, MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET - PG ) வரும் மே 21 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் பல தரப்பினர் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க கோரினர். 
 
இந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 9 ஆம் தேதிக்கு முதுநிலை நீட் தேர்வு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதே போல BBS, BDS உள்ளிட்ட இள நிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEET – UG தேர்வு வரும் ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.