செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (15:43 IST)

ரூ.102ஐ கடந்தது பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகம் உள்பட 5 மாநில பொதுத் தேர்தல் நடந்து கொண்டு கொண்டிருந்தபோது பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது மாறாக பெட்ரோல் விலை குறைந்தது என்பதையும் பார்த்தோம் 
 
ஆனால் தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் உயர்ந்து கொண்டிருந்த நிலையிலும் நான்காவது நாளாக இன்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது
 
குறிப்பாக ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பெட்ரோல் ரூபாய் 100ஐ கடந்து உள்ளது என்பதும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்காநகர் என்ற மாவட்டத்தில் 102 ரூபாய்க்கும் அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல். மத்தியப்பிரதேசம், அனுப்பூரில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.86 ஆகவும், மகாராஷ்டிராவில் பர்பானியில் பெட்ரோல் லிட்டர் ரூ.99.95 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. 
 
இந்த ஆண்டில் 2-வது முறையாக பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100க்கு அதிகமாக செல்கிறது. இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது என்பது தெரிந்ததே