அதிரடியாய் குறைந்த பெட்ரோல், டீசல் விலை!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 4 அக்டோபர் 2017 (21:39 IST)
பெட்ரோல், டீசல் விலை அதிரடியாய் குறைந்துள்ளது என நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. 

 
 
வாகன எரிபொருள் மீதான கலால் வரி (Excise tax) குறைக்கப்பட்டதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 ரூபாய் குறைத்துள்ளது. இதனால் டெல்லியில், பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.70.88-ல் இருந்து, ரூ.68.38 ஆக குறைந்துள்ளது. 
 
அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.59.14-ல் இருந்து ரூ.56.89 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியும் கணிசமாக குறைந்துள்ளது என தெரிகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :