1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (13:35 IST)

பசி, பட்டினி: எலிக்கறியை சாப்பிடும் மக்கள்; உபியில் அவலம்

உத்திரபிரதேசத்தில் பசிக்கொடுமையால் மக்கள் சிலர் எலிக்கறியை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
உத்திரபிரதேசம் குஷிநகரில் ‘முஷாகர்ஸ்’ பழங்குடியின மக்கள், பசிக்கொடுமையால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். போதிய உணவு கிடைக்காததால் சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாம் பட்டினிக் கொடுமையால் பலியாகி வருகின்றனர்.
 
கொடூரத்தின் உச்சமாய் அங்குள்ள மக்கள் பசிக்கொடுமையை போக்க எலிக்கறியை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 
 
தனி மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார் பாரதி, ஆனால் தற்பொழுதும் மக்கள் பசிக்கொடுமையால் இறந்துபோவதை எங்கே சென்று சொல்வது?