செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (18:34 IST)

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு அடுத்து பாஸ்போர்ட்டிலும் சிப்!

சமீபத்தில் அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் சிப் பொருத்தி இருக்கப்பட வேண்டும், சிப் இல்லாத கார்டுகள் பயன்படாது என தெரிவிக்கப்பட்டு பெரும்பாலானோருக்கு சிப் பொருத்திய கார்டுகள் வங்கி சார்பில் கொடுக்கப்பட்டது. 
 
இப்போது சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட் வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
அதாவது, சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம். இது அனைத்து இந்திய தூதரகங்களும், துணை தூதரகங்களும் விரைவில் பாஸ்போர்ட் திட்டத்துடன் இணைக்கப்படும்.
 
இந்த சிப் பாஸ்போர்ட் அனைவருக்கும் மையப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் முறையை உறுதிப்படுத்தும், விசா, பியோ (இந்திய வம்சாவளி அடையாள அட்டை), ஓசிஐ (வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை அட்டை) ஆகியவற்றை வெளிநாடு வாழ் இந்தியர்களின் சமூக பாதுகாப்பு முறையுடன் இணைக்கப்படும் என தெரிவித்தார்.