திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

நடுவானில் திடீரென குலுங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்: 12 பயணிகள் காயம்!

spice jet
நடுவானில் திடீரென ஸ்பைஸ் ஜெட் விமானம் குலுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மும்பையில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென காற்றின் வேகம் காரணமாக விமானம் குலுங்கியது 
 
இதன் காரணமாக பயணிகள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டதாகவும் இதனால் 12 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
காயமடைந்த பயணிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையின் அனைத்து செலவுகளையும் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது