திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (08:28 IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்குகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு கேஸ் விலை உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பதும் இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது