செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:07 IST)

ஒருநாள் கூட முழுவதுமாக நடைபெறாத நாடாளுமன்றம்.. ரூ.140 கோடி வரிப்பணம் வீண்..!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில் ஒரு நாள் கூட முழுவதுமாக நடைபெறாமல் ரூபாய் 140 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாகுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் தொடங்கிய நிலையில் தொடங்கிய முதல் நாள் முதலே ராகுல் காந்தி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தனர் 
 
ராகுல் காந்தி தகுதி நீக்க செய்யப்பட்டதற்கு கண்டனம், தெரிவித்தும் அதானி குழுமத்தின் மீது விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் நாடாளுமன்றம் முடங்கியது
 
தினமும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கூட முழுவதுமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் நடைபெறவில்லை. இதனை அடுத்து இன்றுடன் நாடாளுமன்ற கூட்டம் முடிவடைந்த நிலையில் 140 கோடி ரூபாய் மக்களின் வரி பணம் வீணாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva