1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (13:48 IST)

தன் சிறுநீரை பிடித்து பானிபூரி நீரில் கலக்கும் கடைக்காரர் - அறுவறுப்பான வீடியோ!

அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் உள்ள ஆத்கோகன் என்ற பகுதியில் தெருவோரமாக பானிபூரி கடை நடத்தி வரும் கடைக்காரர் ஒருவர் தன் சிறுநீரை ஒரு மக்கில் பிடித்து அதை பானிபூரிக்கு வழங்கப்படும் தண்ணீரிலேயே கலக்கும் அருவருக்கத்தக்க வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. 
 
இந்த வீடியோவை கண்ட அனைவரும் கடுங்கோபத்திற்கு ஆளாகி அதிக அளவில் பகிர்ந்து திட்டி தீர்த்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி வந்த நிலையில் அந்த பானிபூரி கடைக்கார் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார்.