வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (14:48 IST)

பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை வீழ்த்தியது அபிநந்தன்! புதிய தகவல்!

பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய எஃப் 16 போர் விமானத்தை வீழ்த்தியது, இந்திய போர் விமானி அபிநந்தன் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


 
கடந்த புதன்கிழமை இந்திய வான்பரப்பிற்குள் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் அத்துமீறி  நுழைந்தன. அப்போது இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டியடித்தன. அதில். பாகிஸ்தான் விமானப் படையின் எஃப்-16 ரக போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
 
ஆர்-73 ரக ஏவுகணையை ஏவி அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப்படையின் போர் விமானி அபிநந்தன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மிக்-21 போர் விமானம் மூலம்  ஆர்-73 ரக ஏவுகணையை வீசி  எஃ16 விமானத்தை அவர் அழித்துள்ளாராம். அப்போது நடந்த சண்டையில்  அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் தவறி விழுந்துள்ளது.
 
ஆர்-73 ரக ஏவுகணை விமானம் மணிக்கு 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து செல்லும்போது ஏவப்பட்டாலும், இலக்கை துல்லியமாக குறிவைத்து தாக்கிவிடும் என்கிறார்கள்.