குல்பூசன் ஜாதவ் மரண தண்டனைக்கு தடை: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு


Abimukatheesh| Last Updated: வியாழன், 18 மே 2017 (16:15 IST)
குல்பூசன் ஜாதவுக்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

 
குல்பூசன் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் நாட்டில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. குல்பூசன் ஜாதவுக்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 
 
பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து சர்வதேச நீதிமன்றம் கூறியதாவது:-
 
குல்பூசன் ஜாதவ் கைது செய்யப்பட்டது குறித்து சர்ச்சை நிலவுகிறது. பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூசன் ஜாதவை இந்திய தூதரகத்தின் மூலம் அணுகும் உரிமை உள்ளது. குல்பூசன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆட்சேபணைகள் ஏற்கத்தக்கவை அல்ல, என்று தெரிவித்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :