வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (12:18 IST)

ஹபீஸ் சயீத்தையும் தாவூத்தையும் பாகிஸ்தான், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபடுமானால், மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபீஸ் சயீத்தையும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
 
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, பெஷாவரில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரமாக போரிடுமானால், பாகிஸ்தான் ஹபீஸ் சயீத்தையும், தாவூத் இப்ராஹிமையும் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
 
மேலும், உலகில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதிலும், மனித இனத்திற்கு எதிரனாவராகவும் ஹபீஸ் சயீத் உள்ளார் என்று வெங்கையா நாயுடு கூறினார்.