வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (08:42 IST)

அடங்கிய சீனா; அத்துமீறும் பாகிஸ்தான்! – பதிலடி பணியில் இந்தியா!

சமீபத்தில் இந்தியா –சீனா இடையேயான மோதலால் ஏற்பட்ட போர் பதற்றம் தணிந்துள்ள சூழலில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருவது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் பகுதியில் இந்தியா – சீனா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருதரப்பு வீரர்களும் உயிரிழந்த நிலையில் சமாதான பேச்சு வார்த்தைகள் மூலம் இருதரப்பு ராணுவங்களும் திரும்ப பெறப்பட்டன. எனினும் சீனாவிற்கு பதிலடி தரும் விதமாக சீன செயலிகளை ரத்து செய்வது, கட்டுமான ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்களை விலக்கியது என இந்தியா தனது பதிலடியை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது சீனாவின் அத்துமீறல்கள் குறைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிசூடுகளை நடத்தி வருகிறது. இந்திய எல்லைகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ள நிலையில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.