Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடி ஒரு தீவிரவாதி; பாஜக ஒரு தீவிரவாத கட்சி என பாகிஸ்தான் கடும் விமர்சனம்!

மோடி ஒரு தீவிரவாதி; பாஜக ஒரு தீவிரவாத கட்சி என பாகிஸ்தான் கடும் விமர்சனம்!


Caston| Last Updated: புதன், 4 அக்டோபர் 2017 (10:38 IST)
பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் காவஜா ஆசிப் கூறியுள்ளார். மேலும் அவர் பாஜகவை தீவிரவாத கட்சி எனவும், ஆர்எஸ்எஸ்-ஐ தீவிரவாத அமைப்பு எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
 
கடந்த மாதம் ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியா பல அறிஞர்களையும், மருத்துவர்களையும் உருவாக்கிவரும் நிலையில், பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொகமது, ஹிஸ்புல் முஜாஹிதின் உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகளை உருவாகி வருவதாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் காவஜா ஆசிப், இந்தியப் பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி. நாங்கள் தீவிரவாதிகளை உருவாக்குவதாக கூறிய சுஷ்மாதான் தீவிரவாதியை பிரதமராகக் கொண்டுள்ளார் என்றார்.
 
மேலும் இந்தியாவை ஒரு தீவிரவாதக் கட்சி ஆளுவதாகவும், ஆர்எஸ்எஸ் ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் ஆசிப் கூறியுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த பேச்சு பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :