வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2016 (17:01 IST)

நாடு முழுவதும் செய்தித்தாளில் உணவு பொருட்கள் வழங்க தடை

நாடு முழுவதும் இன்று முதல் செய்தித்தாள்களில் உணவு பொருட்களை மடித்து தர தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
பெரும்பாலான கடைகளில் சாப்பாடு, பஜ்ஜி, போன்ற உணவு பொருட்கள் செய்தித்தாள்களில் மடித்து வழங்கப்படும். அதோடு கைகள் துடைப்பதற்கு கடைகளில் செய்தித்தாள்கள் வைத்திருப்பார்கள்.
 
செய்தித்தாள்களில் உள்ள கிராபைட் என்ற அச்சு மை நமது உடலுக்குள் செல்வதால், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று அனைத்தையும் பாதிக்கும். கிராபைட் சிறிது அளவு உடலுக்குள் சென்றாலே ஆபத்துதான்.  
 
இதனால் செய்தித்தாள்கள் கொண்டு உணவு பொருட்களை மடித்து தர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.