Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவுக்கு தகுதி உள்ளதா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கும் உள்ளது: பா.சிதம்பரம் காட்டம்

திங்கள், 6 பிப்ரவரி 2017 (12:21 IST)

Widgets Magazine

நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 

மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது. சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பில்லை என்றே கூறலாம். சமூக வலைதளங்களிலும் கடுமையான பதிவுக்ளை மக்கள் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் கட்சிகத் தலைவர்களும்  தங்களது எதிப்புகளை பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தங்களது தலைவரை தேர்வு செய்யும் உரிமை அதிமுகவினருக்கு உள்ளது. அதேபோல், தமிழக முதல்வராவதற்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கும் உள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள் அலங்கரித்த முதல்வர் நாற்காலியில் அலங்கரித்த நாட்களை நினைத்து பார்க்கிறேன். ஆனால் தற்போது அதற்கு எதிரான பாதையில் அதிமுக மற்றும் தமிழக மக்கள் பணிக்கின்றனர் என்றும் பதிவு செய்துள்ளார்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நந்தினியின் வளர்ப்பு சரியில்லை: அதிமுக நிர்மலா பெரியசாமி அநாகரிக பேச்சு!

கடந்த டிசம்பர் மாதம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி என்ற 16 வயது இளம்பெண் இந்து ...

news

தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்: அழகிரி மகன் நக்கல்

நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா ...

news

முதல்வர் ஓ.பி.எஸ் ராஜினாமா ஏற்பு - கவர்னர் அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக தமிழக ஆளுநர் ...

news

பள்ளி வாகனத்தில், பெண் பாதுகாவலர்கள் முன்னிலையில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை!

பள்ளி வாகனத்தில், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதற்காக வாகன ஓட்டுனரை போலீஸார் ...

Widgets Magazine Widgets Magazine