வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (15:21 IST)

மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? ப.சிதம்பரம்

P Chidambaram
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பூர்வாங்க பணிகள் 95 சதவீதம் முடிவடைந்தது என சமீபத்தில் மதுரை வந்த பாஜக தலைவர் ஜேபி நட்டா அவர்கள் தெரிவித்திருந்தார்
 
ஆனால் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் எய்ம்ஸ் மருத்துவமனையே 95% முடிந்து விட்டதாக புரிந்து கொண்ட அரசியல் கட்சியினர் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்
 
அந்த வகையில் தற்போது முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கட்டுமான பணிகள் 95 சதவீதம் பூர்த்தி ஆகி விட்டதாக சொல்வது மட்டுமின்றி அந்தப் பகுதிகள் டாக்டர்கள் தினந்தோறும் ஆயிரம் புறநோயாளிகள் கவனிக்கிறார்கள் என்றும் சொல்லி இருக்கலாமே
 
பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு வருகிறது என்றும் அதுவே அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன என்றும் சொல்லி இருக்கலாமே
 
பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு வருகிறது என்றும், நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் சொல்லி இருக்கலாமே என சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்