செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2022 (21:42 IST)

பிரதமர் மோடி சிறுத்தையை விட வேகமானவர்: ஒவைசி கிண்டல்

Ovais
பிரச்சனைகளை தவிர்ப்பதில் பிரதமர் மோடி சிறுத்தையைவிட வேகமானவர் எனவே ஒவைசி கிண்டலுடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தானில் செய்தியாளர்களை சந்தித்த ஒவைசி, பிரதமர் மோடி பிறந்த நாளில் வனவிலங்கு சரணாலயத்தில் 8 சிறுத்தைகளை விடுவிப்பது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர் 
 
அப்போது அவர் பதிலளிக்கும்போது பணவீக்கம் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகள் பற்றி நாம் பேசும்போது அதனை தவிர்த்து பிரதமர் சிறுத்தையை விட வேகமாக ஓடுவார் என்றும் அதனால் சிறுத்தையை விடுவிப்பது சரியான நடவடிக்கைதான் என்றும் அவர் கூறினார் 
 
சீனா நமது நிலப்பரப்பை ஆக்கிரமித்து உள்ளது பற்றி பிரதமரிடம் கேடால் அவரிடமிருந்து எந்த பதிலும் இருக்காது என்றும் இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் ஒவைசி கிண்டலுடன் தெரிவித்துள்ளார்.