1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2015 (18:18 IST)

இந்த ஆண்டின் அதிகபட்ச விலையை தொடும் வெங்காயம்

சந்தையில் வெங்காயம் கிலோ ஒன்றிற்கு 43ஆக உயர்ந்து இந்த ஆண்டின் அதிகபட்ச விலையை தொட்டிருக்கிறது.
 

 
ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான மஹாராஷ்டிரா மாநிலத்தின் லாசல்கானில் வெங்காயம் கிலோ 43 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. மந்தமான வரத்து காரணமாக, வெங்காயத்தின் விலை இந்த ஆண்டின் அதிகபட்சத்தை தொட்டுள்ளது.
 
கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் சராசரி மொத்த விற்பனை விலையாக ஒரு கிலோவிற்கு, முறையே 36.94 மற்றும் 16.10 ஆக இருந்தது. இந்த தகவலை தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இன்று வெங்காய மண்டிக்கு 3ஆயிரத்து 500 குவிண்டால் வந்து சேர்ந்தது. இதற்கு எதிராக, கடந்த ஓராண்டிற்கு முன்னால், 10 ஆயிரம் குவிண்டால் வந்து சேர்ந்தது.
 
இது குறித்து விநியோகஸ்தர்கள், ’ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் உற்பத்திகள் வீழ்ச்சி அடைந்ததாலும், மந்தமான வரத்துக் காரணமாகவும் இந்த விலையேற்றம் நிகழ்ந்திருப்பதாக’ கூறுயுள்ளனர்.
 
மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் வெங்காய உற்பத்தியில் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.