வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (13:05 IST)

அமீர்கானின் கருத்துக்கு எதிர்பு : ஒரு லட்சம் ஸ்நாப்டீல் அப்ளிகேஷன்கள் நீக்கம்

சகிப்புத்தன்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சுமார் ஒரு லட்சம் பேர் தங்கள் செல்போனில் பதிவிறக்கும் செய்த ஸ்நாப்டீல் அப்ளிகேஷனை நீக்கியுள்ளனர்.


 

 
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த அமீர்கான் “இந்தியாவில் நடைபெறும் சகிப்புத்தன்மையற்ற செயல்களைப் பார்த்து பயந்த எனது மனைவி, என்னிடம் நாட்டைவிட்டு போய்விடலாமா என்று கேட்டார்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
 
அமீர்கானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. இவரின் பேச்சுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், காங்கிரசின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் பாஜக தலைவர்கள், இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், அமீர்கானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் விளம்பர தூதராக இருக்கும் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் அப்ளிகேஷனை தங்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த பலர், இப்போது அதை நீக்கம் செய்துள்ளனர். 
 
இரண்டு நாட்களில் சுமார் 1 லட்சம் பேர் இப்படி ஸ்நாப்டீல் அப்ளிகேஷனை நீக்கம் செய்துள்ளனர்.  மேலும் ஸ்நாப்டீலுக்கு வழங்கியிருந்த தர ரேட்டிங்கை குறைத்து பதிவிட்டுள்ளனர். ஐந்து ஸ்டார் கொடுத்தவர்கள் கூட, இப்போது ஒரு ஸ்டார்தான் கொடுத்துள்ளனர். 
 
மொபைல் வாடிக்கையாளர்களின் இந்த அதிரடி செய்கையால், ஸ்நாப்டீல் நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.