செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (17:37 IST)

ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.70 லட்சம்: ஆச்சரிய தகவல்!

ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.70 லட்சம்: ஆச்சரிய தகவல்!
தற்போது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு கிலோ மாம்பழம் 2.70 லட்சம் என்ற தகவல் இணையதளங்களில் பரவி வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என்று மியாசகி வகை மாம்பழத்தை கூறுவதுண்டு. இந்த வகை மாம்பழங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சில இடங்களில் மட்டும்தான் விளைகிறது.
 
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் இந்த வகை மாம்பழங்களை வளர்த்து வருகின்றனர். அதிக சுவை காரணமாக இந்த மாம்பழம் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2.7 லட்சத்திற்கு விற்பனை ஆகும் என தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் இந்த மாம்பழம் மிகவும் விலை அதிகம் என்பதால் இந்த மாம்பழ தோட்டத்தை பாதுகாப்பதற்காக 6 நாய்கள் மற்றும் 4 காவலாளிகளை இந்த தம்பதிகள் பணிக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.