1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (07:17 IST)

உலக கொரோனா பாதிப்பில் நான்கில் ஒருவர் இந்தியர்: அதிர்ச்சி தகவல்!

உலக அளவில் தினமும் லட்சக் கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர்களுக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இந்தியாவை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 60 ஆயிரம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 2.5 லட்சத்தை கடந்துள்ளது என்றும் இதனால் இந்தியாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் உலகில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவை இந்தியா எந்த நேரத்திலும் முந்துவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உலகிலுள்ள மென்பொருளாளர்களில் நான்கில் ஒருவர் இந்தியர் என்ற பெருமைக்குரிய சாதனையை இந்தியா பெற்றிருந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது