திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (20:42 IST)

தபால் நிலையங்களில் 1 கோடிக்கு அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை!

flags
நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வரும் நிலையில் இந்தியர்கள் தங்கள் வீட்டின் முன் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் 
 
இந்த நிலையில் இந்த கோரிக்கையை அடுத்து பலர் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர் இதற்காக நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் 10 நாட்களில் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பொதுமக்களுக்கு தேசிய கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பணியில் 4 லட்சத்து 20 ஆயிரம் தபால் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது