வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2020 (10:47 IST)

ஒரே நாளில் பிரபலமான முதிய தம்பதிகளின் கடை – யூடியுபர் மேல் புகார்!

டெல்லியில் சாலையோரக் கடை வைத்து நடத்திவந்த முதிய தம்பதிகளைப் பற்றி வீடியோ எடுத்து போட்டிருந்தார் யுடீயுபர்.

டெல்லியின் மால்வியா பகுதியில் காந்தா பிரசாத் என்ற முதியவரும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு கடை நடத்தி வந்துள்ளனர். ஆனால் அந்த கடையில் வியாபாரம் சரியாக இல்லாததால் வருமானத்துக்கு வழியின்றி தவித்துள்ளனர். இந்நிலையில் இவர்களைப் பற்றி அறிந்த பிரபல யுடியூபர் கவுரவ் வசன் இவர்கள் கடையை வீடியோ எடுத்து அவர்களை பற்றி ஒரு வீடியோ தொகுப்பை வெளியிட்டார்.

அந்த வீடியோ வைரலாக லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அதைப் பார்த்தனர். பிரபலங்கள், சமூகவலைத்தள குழுக்கள், இளைஞர்கள் என்று பலரும் காந்தா பிரசாத்துக்கு உதவினர். மேலும் அந்த கடைக்கு ஸொமோட்டோ ஆர்டரும் கிடைத்தது. இந்நிலையில் அந்த முதிய தம்பதியினர் இப்போது கவுரவ் வசன் மேல் புகார் அளித்துள்ளனர். அதில் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை அவர் கொடுக்காமல் தனது வங்கிக் கணக்குக்கே வரும் படி அவர் செய்துகொண்டுள்ளார் என புகார் எழுந்துள்ளது.