வாஜ்பாய்க்கு இரங்கல் கூட்டம் நடத்த உத்தரவிட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்


K.N.Vadivel| Last Modified செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (00:56 IST)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் கூட்டம் நடத்த உத்தரவிட்ட தலைமை ஆசியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
 
 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் கூட்டம் நடத்தியதற்காக, ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் புடகுந்தா என்ற இடத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்.
 
ஒடிசா மாநிலம், பாலாசூர் மாவட்டம், புடகுந்தா என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் மாசேன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) பயிற்சி திட்டம் ஒன்றில் கலந்து கொள்ள  அருகில் உள்ள ஊருக்கு சென்றார்.
 
அப்போது, தான் பணிபுரியும் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை தொடர்பு கொண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
 
எனவே, அவரது மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த பள்ளிக் கூடத்தில், வாஜ்பாய் -குஇரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு, வாஜ்பாய் பற்றி தலைமை ஆசிரியர் தெரிவித்த தகவல் தவறானது என்று தெரியவந்தது.
 
இதனையடுத்து, அந்த தலைமை ஆசிரியரை அம்மாவட்ட கலெக்டர் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 
 


இதில் மேலும் படிக்கவும் :