1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (09:11 IST)

ரசிகர்கள் ரகளை :விசாரணைக்கு உத்தரவிட்டார் ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஒடிசா மாநிலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் வேதனை தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான  2-வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய அணி 92 ரன்னில் சுருண்டது.
 
இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்குள் வீசினர். இதனால் போட்டி இரண்டு மணி போட்டி தடைபட்டது.
 
இந்நிலையில் ரசிகர்களின் இந்த அநாகரிக செயல் மாநிலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.