செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:44 IST)

அவை தொடங்கட்டும்; நாங்க யார்னு காட்டறோம்! – தி.காங்கிரஸ் ஓ.பிரையன் சவால்!

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 6 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் திரிணாமூல் காங் எம்பி ஓ ப்ரையன் சவால் விடுத்துள்ளார்.

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்று நாடாளுமன்றம் 12வது நாளாக தொடங்கிய நிலையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டு 2 மணிக்கு தொடங்க உள்ளது. இதுகுறித்து பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி ஓ ப்ரையன் “2 மணிக்கு அவை தொடங்கியதற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்ப்பீர்கள்” என கூறியுள்ளார். இதனால் இன்று அவைகளில் மீண்டும் அமளி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.