Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிறந்த குழந்தையை ஹீட்டரில் பொசுக்கிய நர்ஸ்


Abimukatheesh| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (18:05 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் லஞ்சம் தர மறுத்ததால், துணை செவிலியர் பிறந்த குழந்தையை ஹீட்டர் அருகே வைத்து முகத்தை பொசுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாயா என்ற பெண்ணுக்கு கடந்த திங்கட்கிழமை பெண்குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்த பின் அங்கு பணிபுரிந்த துணை செவிலியர் ஒருவர் 300 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
 
மாயா குடும்பத்தினர் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செவிலியர் குழந்தையை எடுத்துச் சென்று ஹீட்டர் அருகே காட்டியுள்ளார். உடனே மாயா குடும்பத்தினர் செவிலியர் கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிக்கொண்டு அந்த செவிலியர் அங்கிருந்து சென்றார்.
 
ஹீட்டர் அருகே குழந்தையை காட்டியதால், குழந்தையின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் தந்தை இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
செவிலியருக்கு எதிராக பல்வேறு பிரிவிகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர், செவிலியர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகிற டிசம்பர் 26ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :