செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

நுபுர் சர்மா ஆதரவாளர் படுகொலை: ராஜஸ்தானில் 144 தடை உத்தரவு!

144 ban
நுபுர் சர்மா ஆதரவாளர் படுகொலை: ராஜஸ்தானில் 144 தடை உத்தரவு!
ராஜஸ்தான் மாநிலத்தில் நுபுர் சர்மா ஆதரவாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அம்மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த டெய்லர் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மேலும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் என்று ராகுல்காந்தி மதத்தின் பெயரால் ஏற்படும் வன்முறையை ஏற்க முடியாது என்றும் உதய்பூர் கொடூர கொலை அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்புணர்வை விரட்டி சகோதரத்துவம் அமைதியையும் காக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்