வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (01:04 IST)

வாட்ஸ் அப் மூலம் மனைவிக்கு தலாக் கூறிய கணவர்

கேரளாவில் வசிக்கும் மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் கணவர் ஒருவர் தலாக் சொன்ன சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


 

கேரள மாநிலம், ஆழப்புலா மாவட்டம், செர்டலா பகுதியைச் சேர்ந்தவர் சமீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு பல் மருத்துவ மாணவி. இவருக்கு துபாயில் வேலை பார்க்கும் இந்தியர் ஒருவருடன் கேரளாவில் திருமணம் நடைபெற்றது. அப்போது, இந்த திருமணத்திற்கு, வரதட்சணையாக 79 சவரன் நகையும், ரூ.10 லட்சம் பணம் அளித்துள்ளனர்.
 
இந்த நிலையில, திருமணம் முடிந்த 10 நாளில் அவர் மீண்டும் தனியாக துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த தகவல் தெரியாமல், சமீனா, தனது கணவருக்கு செல் போன் மூலம் பல முறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரிடம் பேச முடியவில்லை.
 
இதனையடுத்து, சமீனா செல் போனுக்கு சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் அவரது கணவர் அனுப்பி இருந்தார். அதில், நமக்கு ஆப்பிள் பிடிக்கும் என்பதற்காகத் அதையே தொடர்ந்து சாப்பிட முடியாது என தத்துவம் கூறியதோடு, தலாக் தலாக் தலாக் என தெரிவித்துள்ளார்.
 
இதைக் கண்டு ரத்தக் கண்ணீர் வந்த சமீனா, இது குறித்து தனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, கேரள மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 
உடனே, களத்தில் குதித்த கேரள மகளிர் ஆணையம், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சமீனாவின் கவணவர் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.