ஒரு' மகன்' இல்லை என ... 5 மகள்களை கொன்ற தாய் ! பகீர் சம்பவம்

murder
Last Modified வெள்ளி, 28 ஜூன் 2019 (18:03 IST)
தனக்கு  மகன் இல்லையென்ற காரணத்துக்காக தன்   ஐந்து மகள்களைக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாவாடி காலா கிராமத்தில் வசித்துவருபவர் ரானாராம். இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாறி வருகிறார். இவரது மனைவி வேணு தேவி (387). இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள் ஷாஜி (13), வீனா (9), ராகா (3) மேகா , நீரா , ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என 5 மகள்கள் இருந்தனர்.
 
தனக்கு 5 பிள்ளைகளும் பெண்பிள்ளைகளே உள்ளனர். ஆனால் ஒரு ஆண் மகன் கூட இல்லையே என்ற விரக்தியில் தன் கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில், கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அந்த கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
 
இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 6 பெண்களை மீட்டு உடற்கூறு  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பாவாடி என்ற கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரே கிணற்றில் பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :