வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sivalingam
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (05:12 IST)

களி உருண்டையுடன் சாம்பார். சிறையில் சசிகலாவுக்கான சாப்பாடு

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, நேற்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.



அவருக்கு சிறையில் சிறப்பு வசதி தர சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. சிறையில் சசிகலாவுக்கு  காலை 7 மணி, பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணி என மூன்று வேளையிலும் சிறை உணவு வழங்கப்படும்.

காலை 7 மணிக்கு 2 சப்பாத்தி, சாம்பார் அதனுடன் சேர்த்து காபி வழங்கப்படுகிறது. பகல் 11 மணிக்கு 400 கிராம் சாதம், 400 கிராம் கேழ்வரகு களி உருண்டையுடன் சேர்த்து சாம்பார் வழங்கப்படும் என்றும். மாலை 5 மணிக்கு கலவை சாதம் வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சசிகலா எந்த அரசு பதவியிலும் இல்லாததால் அவருக்கு சிறப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.