ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2023 (14:53 IST)

ஜனவரி 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..! அதிரடி அறிவிப்பு

school
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறக்கப்படும் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் குளிர் ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது காலதாமதமாகி உள்ளது 
 
குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் குளிர் மற்றும் குளிரைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜனவரி 8 ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 ஹரியானா அரசு 2023 ஜனவரி 1 முதல் 15 வரை விடுமுறை என்றும், ஆனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 
 
டெல்லியில் ஜனவரி 1ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும், ஆனால் 9 ஆம் வகுப்பு முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஜனவரி 2 முதல் 14 வரை வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva