வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:27 IST)

இனி தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை.. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு..!

TK Sivakumar
இனி தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை என  கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
 
அவர் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு திறப்பதற்கு தண்ணீர் இல்லை என்றும், எனவே இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் துணை முதல்வரும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
மேலும் தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ள நிலையில் டி.கே.சிவக்குமாரின் இந்த அறிவிப்பு தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran