வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (07:36 IST)

முகேஷ் அம்பானியின் சம்பளம் ஜீரோ: கொரோனா செய்த வேலை!

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் மட்டுமின்றி முதலாளிகளும் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஆசியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு கொரோனா வைரஸ் சிக்கலை கொடுத்துள்ளது என்று கூறினால் மிக இல்லை 
 
முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து ரூபாய் 15 கோடி சம்பளமாக பெற்று வந்த நிலையில் கடந்த நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையில் முகேஷ் அம்பானியின் சம்பளம் ஜீரோ என குறிப்பிடப்பட்டுள்ளது
 
வணிகங்கள் பொருளாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானதை அடுத்து தனக்கு சம்பளம் வேண்டாம் என முகேஷ் அம்பானியே முன் வந்து அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு கடந்த நிதியாண்டு சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது 
 
தொடர்ந்து 11 ஆண்டுகளாக அவருக்கு ரூபாய் 15 கோடி சம்பளம் தரப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு மட்டும் அவருக்கு சம்பளம் இல்லாமல் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அம்பானியின் மனைவி நீடா அம்பானி சுமார் இரண்டு கோடி வரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.