1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (08:24 IST)

நீதிமன்ற உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்: தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் பரபரப்பு

நீதிமன்ற உத்தரவையும் மீறி 40 மாணவிகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வில்லை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள செயிண்ட் ரேமண்ட் என்ற கல்லூரிக்கு நேற்று 40 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர் 
 
நேற்றைய தினம் தேர்வு என்பதால் அவர்கள் கல்லூரிகள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது 
 
ஹிஜப்பை அகற்றிவிட்டு வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியதை அடுத்து தேர்வு எழுத விட்டாலும் பரவாயில்லை ஹிஜாப்பை அகற்ற மாட்டோம் என்று கல்லூரி மாணவிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது