இனிமேல் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய மாட்டேன்: பாபா ராம்தேவ் அதிரடி
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவிற்காக நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்த பாபா ராம்தேவி, அடுத்த தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என உறுதிபட கூறியுள்ளார்.
‘தூய்மை இந்தியா’ திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நன்றாக செயல்படுத்தியும், பெரிய ஊழல் எதுவும் நடக்க அனுமதிக்காமலும் செயல்பட்டு வந்தாலும் விலைவாசி உயர்வு சாமானிய மக்களை வாட்டி வதைக்கின்றது. எனவே பிரதமர் மோடியை விமர்சிப்பது தற்போது அவசியமாகிறது என்று கூறிய பாபா ராம்தேவ், விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும் நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. மாறாக ஒரு நடுநிலைவாதி வலுவான தேசியவாதியும் கூட என்று கூறிய ராம்தேவ், முக்கியமான பிரச்சினைகள் பலவற்றில் நான் மவுனம் சாதித்ததால், நான் யாருக்கும் தேவையில்லை என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யப்போவது இல்லை என்றும் அரசியலில் இருந்து விலகிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும் பாபா ராமாதேவி விரைவில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்படுகிறது